tamilnadu

img

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் குறைந்தது!

புதுதில்லி:
ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு குறைந்துள்ளது.கடந்த 2019 ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சத்து 2 ஆயிரத்து 83 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2019 ஆகஸ்டில் 98 ஆயிரத்து 202 கோடி ரூபாயாக குறைந்து விட்டது.2018 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் வருவாய் 4.51 சதவிகிதம் அதிகரித்து உள்ளது. இருப்பினும், 2019 ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, 3 ஆயிரத்து 881 கோடி ரூபாய் சரிவு ஏற்பட்டு உள்ளது.நடப்பு நிதியாண்டின் துவக்கத்தில்- அதாவது ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ. 1 லட்சத்து 13 ஆயிரத்து 865 கோடி, மே மாதத்தில் ரூ. 1 லட்சத்து 289 கோடி, ஜூனில் ரூ. 99 ஆயிரத்து 939 கோடி, ஜூலையில் ரூ. 1 லட்சத்து 2 ஆயிரத்து 83 கோடி என்ற அளவிற்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.ஆகஸ்ட் மாத வருவாயில், சிஜிஎஸ்டி (CGST) ரூ. 17 ஆயிரத்து 733 கோடி, எஸ்ஜிஎஸ்டி (SGST) ரூ. 24 ஆயிரத்து 239 கோடி, ஐஜிஎஸ்டி (IGST) ரூ. 48 ஆயிரத்து 958 கோடி என வசூலாகியுள்ளது. மத்திய அரசின் பங்கு ரூ. 40 ஆயிரத்து 898 கோடியாகவும், மாநிலங்களின் வருவாய் ரூ. 40 ஆயிரத்து 862 கோடியாகவும் உள்ளது.

;